ஞாயிறு, 29 டிசம்பர், 2019

அறிமுகம்

முனைவர் ச.தமிழரசன் அவர்கள் பழம்பெருமை வாய்ந்த மதுரை மாநகரத்தில் உழைத்து உயரும் பண்பாடு நிறைந்த சீர்மிகுப் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்தவர். கற்றறிந்த பெருமக்களால் மதுரை செல்லூர் உபாத்தியாயர் என அறியப்பட்டவர். கவிஞர், காந்திய சிந்தனையாளர், மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்.


மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முழுநேர முனைவர் பட்டத்தை 2014 இல் பெற்றவர். பல்கலைக்கழக மானியக்குழுவிட் நெட் தேர்வில் தமிழ் உதவிப்பேராசிரியருக்கான தேசியத் தகுதியை 2009 இல் பெற்றவர். மேலும் ஜெ.ஆர்.எப் எனப்படும் இளநிலை ஆராய்ச்சியாளராகத் தேர்ந்தவர்.


மேதகு தமிழக ஆளுநர் அவர்களிடம் முனைவர் பட்டம் பெற்ற காட்சி


தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கற்பிக்கும் திறன்பெற்ற ஆசிரியர். தமிழ்க்கணினிச் சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் விதைத்துவருபவர். தமிழ்வழிக்கணினி ஆய்வில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கோடைப்பண்பலை வானொலியிலும் ஞானவானி கல்வி வானொலியிலும் பகுதிநேர அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். நெட் தேர்வு முதல்தாள் பயிற்சியாளர்.
பாரதியார் பிறந்தநாள் விழா


எழுதியுள்ள நூல்கள்:

காலந்தோறும் மதுரை
வெளிவந்த ஆண்டு 2017.



மதுரை திருவாப்பனூர் திருக்கோவில்
வெளிவந்த ஆண்டு 2021.


எனது ஹைக்கூ
வெளிவந்த ஆண்டு 2021.



அனலாட்டம்
வெளிவந்த ஆண்டு 2022.




பதிப்பாசிரியர்
தமிழறிவுச் சோலை
வெளிவந்த ஆண்டு 2022



மரபுக்கவிதையும் புதுக்கவிதையும் எழுதக்கூடியவர். பல்வேறு இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக